ஹெல்மெட் வழக்குகள்  கடந்தாண்டை விட 91% அதிகரிப்பு: தமிழக அரசு  

தமிழகத்தில் ஹெல்மெட் அணியாதவர்கள் மீது பதிவான வழக்குகள் கடந்தாண்டை விட 91% அதிகரித்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
 | 

ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்க உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தது. 

அந்த அறிக்கையில், ‘கடந்தாண்டு ஆகஸ்ட் வரை ஹெல்மெட் அணிந்தும், இருசக்கர வாகன விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 224 ஆகவும், ஹெல்மெட் அணியாமல் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,337 ஆகவும் உள்ளது.

ஹெல்மெட் அணியாதவர்கள் மீது பதிவான வழக்குகள் கடந்தாண்டைவிட 91% அதிகரித்துள்ளது. கடந்தாண்டு ஆகஸ்ட் வரை ஹெல்மெட் அணியாத காரணத்திற்காக் 22.65 லட்சம் பேர் மீதும், இந்தாண்டு 43.31 லட்சம் பேர் மீதும் வழக்குகள் பதியப்பட்டுள்ளது’ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP