கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு 

கோவை, நீலகிரி, திண்டுக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 | 

கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு 

கோவை, நீலகிரி, திண்டுக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தியில், ‘வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக உள்மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. கோவை, நீலகிரி, திண்டுக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்’ என தகவல் தெரிவித்துள்ளது.

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஒசூர் - 7 செ.மீ., மேட்டுப்பாளையம், சின்னக்கல்லாரில் தலா 5 செ.மீ., மழையும், நிலக்கோட்டை - 4 செ.மீ., உதகை, அரவக்குறிச்சி, ஏற்காடு, நடுவட்டத்தில் தலா 3 செ.மீ., மழையும் பதிவாகியுள்ளது என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP