சென்னையில் 2 நாட்களுக்கு கனமழை; வானிலை மையம்

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த இரு தினங்களுக்கு மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
 | 

சென்னையில் 2 நாட்களுக்கு கனமழை; வானிலை மையம்

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த இரு தினங்களுக்கு மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:- மத்திய மேற்கு மற்றும் அதனையொட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத்தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் சற்று வலுப்பெற்று மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து செல்லும். அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி தொடர்ந்து நிலவுகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது. ஒரு சில இடங்களில் கனமழையும், ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்துள்ளது. அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் மற்றும் மண்டபத்தில் 18 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

அடுத்து வரும் 2 தினங்களை பொறுத்தவரையில் தமிழகம், புதுவையில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி ஆகிய மேற்கு தொடர்ச்சி மலையையொட்டியுள்ள மாவட்டங்களில் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களிலும், காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், தி.மலை ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களிலும் மிக கனமழை பெய்யக்கூடும். 

சென்னை, விழுப்புரம், கடலூர், புதுவை, டெல்டா மாவட்டங்கள், அரியலூர், பெரம்பலூர், சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் சூறைகாற்று மணிக்கு  45 முதல் 55 கிமீ வேகத்தில் வீசக்கூடும் என்பதாலும், இடியுடன் கூடிய மழையும் பெய்யக்கூடும் என்பதாலும் மீனவர்கள் அடுத்து வரும் இரு தினங்களுக்கு அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Newstm.in 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP