நாளை 4 மாவட்டங்களில் கனமழை!  50 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசும்! வானிலை அலர்ட்!

தமிழகத்தில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது, எனவே, சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த சனிக்கிழமை முதல் தீவிரமாக மழை பெய்து வருகிறது.
 | 

நாளை 4 மாவட்டங்களில் கனமழை!  50 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசும்! வானிலை அலர்ட்!

நாளை 4 மாவட்டங்களில் கனமழை!  50 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசும்! வானிலை அலர்ட்!

தமிழகத்தில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது, எனவே, சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த சனிக்கிழமை முதல் தீவிரமாக மழை பெய்து வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், கடலூர், மதுரை, கோவை என பல்வேறு மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில், கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பல இடங்களில் பாதிக்கப்பட்டிருக்கிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்ததால் பல இடங்களில் தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது.

இந்நிலையில், அடுத்த 24 மணிநேரத்துக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, குமரிக்கடல் கடல் பகுதியில் மணிக்கு 40 - 50 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP