12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தஞ்சை, மதுரை, சேலம், நாகை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 | 

12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தஞ்சை, மதுரை, சேலம், நாகை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

சென்னை வானிலை ஆய்வும் மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், " வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தஞ்சை, மதுரை, சேலம், விழுப்புரம், நாகை, திருச்சி உட்பட 12 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. 

சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், மாலை அல்லது இரவு நேரங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வந்தவாசியில் 12 செ.மீ மழைப் பதிவாகியுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP