10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தருமபுரி, வேலூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 | 

10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தருமபுரி, வேலூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவி வரும் வளிமண்டல மேல்அடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று பெரும்பாலான மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. தருமபுரி, வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், சேலம், உள்ளிட்ட 10 மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; மாலை அல்லது இரவில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP