தமிழகத்தில் பரவலாக மழை....சென்னையில் பெய்த மழையின் அளவு...! 

தமிழகத்தில் சென்னை, கோவை உள்ளிட்ட இடங்களில் இரவு முழுவதும் கனமழை பெய்த நிலையில், தற்போது பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
 | 

தமிழகத்தில் பரவலாக மழை....சென்னையில் பெய்த மழையின் அளவு...! 

தமிழகத்தில் சென்னை, கோவை உள்ளிட்ட இடங்களில் இரவு முழுவதும் கனமழை பெய்த நிலையில், தற்போது பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

மதுரை மாவட்டத்தில் மேலூர், திருவாதவூர், ஒத்தக்கடை, சிட்டம்பட்டி, கீழவளவு, கொட்டாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும், திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி, நெற்குணம், தெள்ளார், தேசூர், சாலவேடு உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

ராமேஸ்வரம், தங்கச்சிமடம் மற்றும் பாம்பனில் தலா 11 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக மன்னார்குடி, திருத்துறைப்பூண்டியில் தலா 10 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. நீடாமங்கலம் மற்றும் முத்துப்பேட்டையில் தலா 9 செ.மீ., பாண்டவையாறு தலைப்பில் 8 செ.மீ., மழையும் பதிவாகியுள்ளது.

சென்னையில் காலை 6 மணி நிலவரப்படி அயனாவரம் - 58 மி.மீ., எழும்பூர் - 54 மி.மீ., கிண்டி - 106 மி.மீ., மயிலாப்பூர் - 102 மி.மீ., சோழிங்நல்லூர் - 112 மி.மீ., மாம்பலத்தில் 92 மி.மீ., மழையும் பதிவாகியுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP