திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை மையம்

திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 | 

இதுதொடர்பாக வானிலை மையத்தின் அறிவிப்பில், ‘மேற்கு மத்திய வங்கக் கடல், அதனையொட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக 24 மணி நேரத்திற்கு தமிழகம், புதுவையின் பெரும்பாலான பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது. இதில்,  திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை, கடலூர், விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், நாகை, அரியலூர், பெரம்பலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, ராமநாதபுரம், நாமக்கல், சேலம், புதுக்கோட்டை, குமரியில் கனமழைக்கு வாய்ப்புள்ளது’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP