தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு 

தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 | 

தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு 

தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘கன்னியாகுமரி முதல் கோவா வரை வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள காற்றின் திசை மாறுபாடு காரணமாக வடக்கு உள்தமிழக மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கும், தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கும் வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; நகரின் சில பகுதிகளில் லேசாக மழை பெய்ய வாய்ப்புள்ளது’என்று அதில் குறிப்பிட்டுள்ளது.

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அதிராம்பட்டினம் - 4 செ.மீ., தென்காசி, ராமேஸ்வரத்தில் தலா 3 செ.மீ., மழைப்பதிவாகியுள்ளது என்றும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP