தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை மையம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
 | 

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை மையம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள தகவலில், வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி இருப்பதால் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது என்றும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. 

வங்கக்கடல் பகுதியில் 50 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP