வட தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு!

அடுத்த 3 நாட்களுக்கு வட தமிழகத்தில் கன மழை பெய்யக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
 | 

வட தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு!

அடுத்த 3 நாட்களுக்கு வட தமிழகத்தில் கன மழை பெய்யக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு வெளியிட்டுள்ள அறிக்கையில், " மேற்கு மத்திய வங்கக்கடல் மற்றும் ஆந்திரா கரை அருகே புதிய காற்றழுத்தம் உருவாகியுள்ளதாகவும் இது அடுத்த 12 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் அடுத்த 3 நாட்களுக்கு ஆந்திரா, தெலுங்கானா, வட தமிழகம், உள் கர்நாடகாவில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், மகாராஷ்டிரா, கொங்கன் மலை பகுதிகளில் அதீத கனமழைக்கு வாய்ய்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP