6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

தருமபுரி, சேலம், நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 | 

இதுதொடர்பாக வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென் தமிழகம் மற்றும் அதனையொட்டியுள்ள பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தருமபுரி, சேலம், நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்’ என்று தெரிவித்துள்ளது.

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோத்தகிரி, சத்தியமங்கலத்தில் 4 செ.மீ., மழையும், தளி, கோபிசெட்டிபாளையம் 3 செ.மீ., மழையும் பதிவாகியுள்ளதாகவும் வானிலை தகவல் கூறியுள்ளது. 

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP