திருச்சியில் இதய செயலிழப்பு சிகிச்சை மையம்! காப்பீட்டு திட்டத்தில் பயன்பெறலாம்..

திருச்சி மாநகரில் இதய செயலிழப்பிற்கான தனது கிளினிக் மற்றும் இதய மாற்ற சேவைகளை ரானா மருத்துவமனையுடன் இணைந்து சென்னை கிளன் ஈகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனை துவங்கியுள்ளது.
 | 

இதய செயலிழப்பு என்பது உடனடியாகவும், துல்லியமாகவும் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் கல்லீரல், சிறுநீரகங்கள் மற்றம் மூளை போன்ற பிற உறுப்புகளை பாதிக்கின்ற மிக ஆபத்தான நோயாகும். இதய செயலிழப்பினால் ஏற்படும் இறப்பு விகிதங்கள் இந்தியாவில் அதிகரித்து வருகின்றன.

திருச்சி மாநகரில் இதற்கான ஆரம்ப சிகிச்சையை வழங்குவதற்கும், இதயமாற்றப்பதியம் செய்து கொண்ட நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சைக்கு பிந்தைய சிகிச்சை முறை மேற்கொள்வதற்கும், திருச்சி ரானா மருத்துவமனையுடன் ஒத்துழைப்பு உடன்பாட்டை குளோபல் மருத்தவமனை மேற்கொண்டது.  

திருச்சியில் இதய செயலிழப்பு சிகிச்சை மையம்! காப்பீட்டு திட்டத்தில் பயன்பெறலாம்..

இந்த ஒப்பந்தம் மூலம் இதய செயல்இழப்புக்கான ஆரம்ப சிகிச்சையை திருச்சியில் மேற்கொள்ளவும், இதய மாற்று அறுவை சிகிச்சை முடிந்து வாழ்நாள் முழுவதற்குமான தொடர் கண்காணிப்பு, மருத்துவ ஆலோசனைகளை பெறவும் இந்த மையத்தில் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக இந்த மையத்திலேயே இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. 

இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யவேண்டிய கிராமப்புற ஏழை எளியோருக்கு இந்த சிகிச்சை மையத்தின் மூலம் முதல்வர் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் இலவசமாக சிகிச்சை கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP