சான் பிரான்சிஸ்கோவில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு புறப்பட்டார் முதல்வர்!

அமெரிக்கா சான் பிரான்சிஸ்கோவில் நடந்த முதலீட்டாளர்கள் கூட்டத்திற்கு பின்னர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்குப் புறப்பட்டுச் சென்றார்.
 | 

அமெரிக்கா, லண்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரபல மின்னணு கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லா நிறுவனத்தின் தொழிற்சாலையை இன்று பார்வையிட்டார். சான் பிரான்சிஸ்கோவில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் அங்குள்ள 35 நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தொடர்ந்து, கலிபோர்னியா நகரில் பிரபல கார் நிறுவனமான டெஸ்லா உற்பத்தி தொழிற்சாலையை முதல்வர் பார்வையிட்டார். டெஸ்லா நிறுவனத்தின் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் டெஸ்லா நிறுவனத்தை வருமாறு அவர் தெரிவித்தார். ப்ளூம்ஸ்டார் எனர்ஜி படத்தையும் அவர் பார்வையிட்டார் இதன் பின்னராக சான்பிரான்சிஸ்கோ நகரில் இருந்து அவர் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு புறப்பட்டுச் சென்றார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP