யுகாதி தினம்: தெலுங்கு மற்றும் கன்னட மக்களுக்கு முதல்வர் வாழ்த்து!

யுகாதி புத்தாண்டு தினத்தை (ஏப்ரல் 6) முன்னிட்டு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
 | 

யுகாதி தினம்: தெலுங்கு மற்றும் கன்னட மக்களுக்கு முதல்வர் வாழ்த்து!

யுகாதி புத்தாண்டு தினத்தை (ஏப்ரல் 6) முன்னிட்டு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். 

யுகாதி தினத்தை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், "தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த “யுகாதி” புத்தாண்டு திருநாள் நல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

பன்மொழி பேசும் மக்களும், பாரினில் ஒற்றுமையாக வாழலாம் என்பதை உலகிற்கு உணர்த்தும் வகையில், தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள், பேசும் மொழி, பாரம்பரியம் மற்றும் பண்பாட்டில் வேறுபட்டு இருந்தாலும், உணர்வால் ஒன்றுபட்டு, காலங்காலமாய் தமிழ்நாட்டு மக்களோடு நல்லுறவைப் பேணி, தமிழ் நாட்டின் வளர்ச்சிக்காக உறுதுணையாக வாழ்ந்து வருவது பெருமைக்குரிய ஒன்றாகும்.

மலரும் இப்புத்தாண்டு, உங்கள் அனைவரது வாழ்விலும் அமைதியையும், மகிழ்ச்சியையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் என்று வாழ்த்தி, தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களுக்கு மீண்டும் ஒருமுறை எனது மன மார்ந்த யுகாதி திருநாள் வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

இவ்வாறு அவரது வாழ்த்து அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP