பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பயங்கரம்!!

கோவை : பிறந்தநாள் கொண்டாட்டம் என்ற பெயரில் சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த 4 பேரை போலீசார் கைது செய்து போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
 | 

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பயங்கரம்!!

கோவை : பிறந்தநாள் கொண்டாட்டம் என்ற பெயரில் சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த 4 பேரை போலீசார் கைது செய்து போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கோவை சீரநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் அப்பகுதியைச் சேர்ந்த ராகுல் (22), பிரகாஷ் (22), நாராயணமூர்த்தி (22) மற்றும் கார்த்திகேயன்(22) ஆகியோருடன் நட்பாக பழகி வந்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே கடந்த 26ஆம் தேதியன்று பிறந்தநாள் கொண்டாடுவதாக கூறி அச்சிறுமியை வெளியில் அழைத்துச் சென்றுள்ளனர் இவர்கள் நால்வரும். பின்பு, இவர்கள் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

பிறந்தநாள் பார்ட்டி கொண்டாடி விட்டு வீடு திரும்பிய சிறுமி சோர்வாக இருப்பதைக் கண்டு பெற்றோர் விசாரித்தபோது, அந்த இளைஞர்கள் தன்னை கொடுமைப்படுத்தியதாக கூறியுள்ளார் அந்த சிறுமி.

இதை தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் ஆர்.எஸ் புரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்துள்ளனர். பெற்றோர்களின் புகாரை தொடர்ந்து, ராகுல் உட்பட அந்த நான்கு இளைஞர்களையும் கைது செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், போக்ஸோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP