ஜி.எஸ்.டி வரி வசூலிப்பை எளிமைபடுத்த வேண்டும்: விக்ரமராஜா

ஜிஎஸ்டி வரி வசூலிப்பு சட்டத்தை இன்னும் எளிமை படுத்த வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்ரமராஜா கோரிக்கைவிடுத்துள்ளார்.
 | 

ஜி.எஸ்.டி வரி வசூலிப்பை எளிமைபடுத்த வேண்டும்: விக்ரமராஜா

ஜிஎஸ்டி வரி வசூலிப்பு சட்டத்தை இன்னும் எளிமை படுத்த வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்ரமராஜா கோரிக்கைவிடுத்துள்ளார். 

சேலம் மளிகை சில்லரை வியாபாரிகள் சங்கத்தின் 47ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் கல்வி பரிசளிப்பு விழா இன்று தமிழ்ச் சங்கம் கட்டட வளாகத்தில் முப்பெரும் விழாவாக நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், " புளி, வருகடலை போன்றவைகளுக்கு மத்திய அரசு வரி விலக்கு அளித்துள்ளது. மேலும் உள்ள குழப்பமான வரி விதிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளோம். ஜிஎஸ்டி வரி வசூலிப்பு சட்டத்தை இன்னும் எளிமை படுத்த வேண்டும். சட்டத்துறை விதிகளை அரசு அதிகாரிகள் புரிந்து கொள்ள முன்வர வேண்டும். 

உள்நாட்டு வணிகத்தை காப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாண்புமிகு மத்திய நிதியமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளிக்க இருக்கிறோம்.

பன்னாட்டு நிறுவனங்களின் பொருட்கள் அனைத்தும் பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டுத் தான் விற்கப்படுகிறது. ஆனால் உள்நாட்டு பொருட்களுக்கு பிளாஸ்டிக் கவர் செய்யப்பட்டிருப்பதை அதிகாரிகள் பறிமுதல் செய்து கோடிக்கணக்கில் அபராதம் விதிக்கிறார்கள்.  அதிகாரிகளின் அபராத விதிப்பு குழப்பமான நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அக்டோபர் 2-ம் தேதிக்கு பிறகு சேலத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

பெப்சி, கோக் உள்ளிட்ட நச்சுத்தன்மை கொண்ட வெளிநாட்டு குளிர்பான நிறுவனங்களுக்கு தடை விதிக்க வலியுறுத்தி வருகிறோம். உள்நாட்டு குளிர்பான நிறுவனங்களை  வளர்க்க அரசு உதவ வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருக்கிறோம். விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் தமிழ்நாடு வணிகர்களின் ஆதரவு யாருக்கு என்பதை ஆட்சிமன்ற குழுவைக் கூட்டி முடிவு எடுத்து அதன் பிறகு அறிவிப்போம்.

அமேசான்,  ஃப்ளிப்கார்ட் போன்ற ஆன்லைன் வணிக நிறுவனங்கள் மிகப்பெரிய மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிறுவனங்களை அரசு தடை செய்ய வேண்டும். 

சேலத்தில் மேம்பால பணிகள் வியாபாரிகளின் வணிகம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. வியாபாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடர்பாடு ஏற்படுத்தாத வகையில் மேம்பால பணிகள் மற்றும் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளையும் போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும்.

ஆன்லைன் மூலம் மளிகை பொருட்களை விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அது ஒரு மோசடி ஒரு கிலோ பருப்பு ஒரு ரூபாய்க்கும் ஒரு கிலோ சர்க்கரை ஒரு ரூபாய்க்கும் விற்று மோசடி செய்கிறார்கள் இது சட்டப்படி குற்றம்." என்று தெரிவித்தார்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP