குரூப் 2 தேர்வு முறையில் மாற்றம்! பொதுத்தமிழ் பாடம் நீக்கம்..

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் வினாத்தாள் அமைப்பு மற்றும் தேர்வுக்குரிய பாடங்களில் மாற்றம் செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
 | 

குரூப் 2 தேர்வு முறையில் மாற்றம்! பொதுத்தமிழ் பாடம் நீக்கம்..

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் வினாத்தாள் அமைப்பு மற்றும் தேர்வுக்குரிய பாடங்களில் மாற்றம் செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சார் பதிவாளர், உதவி ஆய்வாளர் உள்ளிட்ட பணிகளுக்கான குரூப்-2 தேர்வு தேர்வை டிஎன்பிஎஸ்சி நடத்தி வருகிறது. இதில், நேர்முகத்தேர்வு உடன் கூடிய குரூப்-2 மற்றும் நேர்முகத்தேர்வு இல்லாத குரூப்-2 தேர்வுகள் உள்ளன. இவை இரண்டும் இதுவரை தனித்தனியாக நடத்தப்பட்டு வந்த நிலையில், வரும் ஆண்டு முதல் இரண்டு தேர்வுகளும் ஒன்றாக நடத்தப்படுகின்றன.

இதில் குரூப் 2 தேர்வுக்கு முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என மூன்று நிலைகளும் குரூப் 2 தேர்வுக்கு முதல்நிலை தேர்வு மற்றும் முதன்மை தேர்வு மட்டும் நடத்தப்படும். மதிப்பெண்களின் அடிப்படையில் அவர்களுக்கு பதவிகள் வழங்கப்படும். மேலும் முன்னதாக குரூப் 2 தேர்வில் பொதுத் தமிழ் பாடத்திலிருந்து 100 கேள்விகள் கேட்கப்படும். ஆனால், வரும் ஆண்டு முதல் பொதுத்தமிழ் நீக்கப்பட்டுள்ளது பொது அறிவு மற்றும் கணிதம் பாடத்தில் இருந்து அனைத்து கேள்விகளும் கேட்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP