எழுத்தாளர் ஜெயமோகனை தாக்கிய மளிகைக் கடைக்காரர் கைது!

எழுத்தாளர் ஜெயமோகனை தாக்கிய மளிகைக் கடைக்காரரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 | 

எழுத்தாளர் ஜெயமோகனை தாக்கிய மளிகைக் கடைக்காரர் கைது!

எழுத்தாளர் ஜெயமோகனை தாக்கிய மளிகைக் கடைக்காரரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பார்வதிபுரத்தில் வசித்து வருகிறார். தமிழ் மற்றும் மலையாளத்தில் பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ளார். பல்வேறு திரைப்படங்களுக்கும் வசனம் எழுதி உள்ளார்.

இந்நிலையில், நேற்று இரவு பார்வதிபுரத்தில் உள்ள கடையில் ஜெயமோகன் தோசை மாவு வாங்கி உள்ளார். மாவு புளித்துப்போய் இருந்ததால் அதுகுறித்து ஜெயமோகன் கடைக்காரரிடம் கேட்டுள்ளார். மேலும், இதனால் அவருக்கும், கடைக்காரருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த கும்பல் ஜெயமோகனை தாக்கியுள்ளனர்.

தொடர்ந்து இது தொடர்பாக ஜெயமோகன் வடசேரி போலீசாரிடம் புகார் அளித்தன்படி, போலீசார் அந்த மளிகைக் கடைக்காரரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP