5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டிலே பொதுத்தேர்வு! -பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

2018-19 கல்வியாண்டில் இருந்து 5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த தேர்வு 2 மணி நேரம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 | 

5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டிலே பொதுத்தேர்வு! -பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

2018-19 கல்வியாண்டில் இருந்து 5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த தேர்வு, 60 மதிப்பெண்களுக்கு 2 மணி நேரம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்ற புதிய நடைமுறையை மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்தது. இதனை அந்தந்த மாநில அரசுகளே ஏற்று நடத்தலாம் என்றும் தெரிவித்திருந்தது.

அதன்படி, இது தொடர்பான அறிவிப்பை தமிழக பள்ளிக்கல்வித்துறை இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, "2018-19 கல்வியாண்டில் இருந்தே இந்த பொதுத்தேர்வு நடைமுறை கொண்டுவரப்படும். 

தமிழகத்தில் உள்ள அனைத்து வகை தொடக்க, நடுநிலை, மேல்நிலை, மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் பயிலும் 5ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்தாண்டே பொதுத்தேர்வு நடத்தப்படும். இதற்கு மாணவர்களின் எண்ணிக்கை கணக்கெடுப்பு பணிகள் தொடங்கியுள்ளன. இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. 

வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டார வள மைய அலுவலர்கள் கொண்டு குழு அமைத்து தேர்வு மையங்கள் அமைக்கப்படவேண்டும். 
மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு 60 மதிப்பெண்களுக்கு, 2 மணி என்ற நேரம் என்ற அளவிலும் நடைபெறும். 

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தேர்வு கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. தனியார், சுயநிதி மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் பயிலும் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு  தேர்வுக் கட்டணம் ரூ 50ம், 8ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுக் கட்டணம் ரூ.100 செலுத்தப்படவேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP