காவல்துறை , பொதுகமக்களிடையே உள்ள இடைவெளி களைய வேண்டும்: நடிகர் விஜய்சேதுபதி

காவல்துறைக்கும் மக்களுக்கும் இடையேயான இடைவெளியை களையும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த காவல்துறையினர் ஏற்பாடு செய்ய வேண்டும் என நடிகர் விஜய் சேதுபதி கேட்டுக்கொண்டுள்ளார்.
 | 

காவல்துறை , பொதுகமக்களிடையே உள்ள இடைவெளி களைய வேண்டும்: நடிகர் விஜய்சேதுபதி

காவல்துறைக்கும் மக்களுக்கும் இடையேயான இடைவெளியை களைய காவல்துறையினர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த வேண்டும் என நடிகர் விஜய் சேதுபதி கேட்டுக்கொண்டுள்ளார்.

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தொலைந்து போன அலைபேசியை கண்டறிதல் உள்ளிட்ட 8 வகையான சிறப்பம்சங்களை கொண்ட டிஜிகாப் (DIGICOP) என்ற புதிய அலைபேசி செயலியை சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் அறிமுகம் செய்து வைத்தார்.

இதனை தொடர்ந்து டிஜிகாப் செயலி குறித்த விளம்பர அட்டையை காவல் ஆணையர் வெளியிட அதை சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நடிகர் விஜய் சேதுபதி பெற்றுக் கொண்டார். மேலும், கண்காணிப்பு கேமரா அமைப்பதன் அவசியம் குறித்து தயாரிக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு குறும்படத்தின் குறுந்தகடு மற்றும் சென்னை காவல்துறையில் புது பொலிவுடன் விளங்கும் காவல் நிலையங்கள் பற்றி தயாரிக்கப்பட்டுள்ள குறுந்தகடையும் வெளியிட்டார்.

காவல்துறை , பொதுகமக்களிடையே உள்ள இடைவெளி களைய வேண்டும்: நடிகர் விஜய்சேதுபதி

இந்நிகழ்ச்சியில், பேசிய நடிகர் விஜய் சேதுபதி, காவல்துறை பொதுமக்களை கூர்ந்து கவனித்து அவர்களின் நலனுக்காக இந்த செயலியை உருவாக்கியுள்ளது. இதன்மூலம் காவல்துறையுடனான மக்களின் நெருக்கம் அதிகரிக்கும் என தெரிவித்தார். மேலும், இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஆரோக்கியமானது என்றாலும் இன்னும் காவல்துறைக்கும் மக்களுக்கும் இடையேயான இடைவெளி அதிகம் உள்ளபடியால் அதை களையும் வகையில் ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த காவல்துறை ஏற்பாடு செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

இதனை தொடர்ந்து பேசிய காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், மாநகரில் அலைபேசிகள் தொலைந்து போவதும், திருடப்படுவதும் பெருமளவில் நடைபெற்று வந்ததே இந்த அலைபேசி செயலி உருவானதன் முக்கிய காரணம் என தெரிவித்தார். இந்த செயலியில் இதுவரை 18 ஆயிரம் அலைபேசிகளின் டேட்டா பேஸ்கள் பதியப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் திருடப்பட்ட அலைபேசிகளை கண்டறியவும், காணாமல் போன அலைபேசிகளை கண்டறியவும் இயலும் என தெரிவித்தார்.

அதுமட்டுமன்றி அருகிலுள்ள காவல் நிலையங்கள், போக்குவரத்து நெரிசல், இருசக்கர வாகன திருட்டு உள்ளிட்ட 8 வகையான உதவிகளையும் இந்த செயலி மூலம் பெறலாம் என தெரிவித்தார். மேலும், மாநகராட்சியின் உதவியுடன் அனைத்து காவல் நிலையங்களும் புதுப் பொலிவுடன் சுத்தமும் சுகாதாரமும் நிறைந்துள்ள இடமாக மாறியுள்ளதாகவும், இந்த நிலை தொடர்ந்து செயல்பட அனைவரும் பாடுபட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP