ஆளுநர் சும்மா இருக்கணுமா?- அமைச்சர் செல்லூர் ராஜூ

ஒரு மாநிலத்தின் ஆளுநர் சும்மா இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
 | 

ஆளுநர் சும்மா இருக்கணுமா?- அமைச்சர் செல்லூர் ராஜூ

ஒரு மாநிலத்தின் ஆளுநர் சும்மா இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்ட அதிமுக இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில் நடைபெறும் உறுப்பினர் சேர்ப்பு நிகழ்ச்சியை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ துவக்கி வைத்தார். அப்போது பேசிய அவர், கல்வித்துறைக்கு எந்த மாநிலத்திலும் ஒதுக்கப்படாத நிதியை ஜெயலலிதா வழியில் நடக்கும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெறும் அரசு இந்தாண்டு 22 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளனர். 

சிவப்பு விளக்கு வாகனத்தில் நான் செல்லும் போது மட்டுமே நான் அமைச்சர், வாகனத்தைவிட்டு நான் கீழே இறங்கினால் சாதாரண தொண்டன்தான். எதிர்கட்சியாக இருக்கும் போது போராட்டம் நடத்தும் திமுக, ஆட்சிக்கு வந்தால் மக்கள் நலனை பற்றி யோசிக்க மாட்டார்கள். திமுகவில் வாரிசு அரசியல் தான் நடக்கின்றது, அதற்கு உதாரணம் உதயநிதி ஸ்டாலின. ஆனால் அதிமுகவில் அப்படி இல்லை, சாதாரண விவசாய குடும்பத்தை சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமி சாதாரண தொண்டராக கட்சியில் சேர்ந்து படிப்படியாக உயர்ந்து முதல்வராகியுள்ளார். அதேபோல் தான் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் உயர்ந்துள்ளார். சாதாரண தொண்டராக அதிமுகவில் இணைந்த நான் இன்று அமைச்சராக உள்ளேன் என கூறினார். 

அதிமுக கட்சி ஆரம்பித்து இரட்டை இலை சின்னம் பெற்ற சிலகாலத்திலேயே அதிமுக அமோக வெற்றி பெற்றது, அதற்கு காரணம் இந்த மதுரை மக்கள் தான் என கூறிய அவர். ஒரு மாநிலத்தின் ஆளுநர் சும்மா இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. மாநிலத்தின் செயல் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யலாம். மதுரை மாநகராட்சிக்குக்குட்பட்ட 100 வார்டுகளுக்கு பெரியாறு அணையிலிருந்து இரும்பு பைப்புகள் மூலம் குடிநீர் வழங்க உள்ளோம். இனி இளைஞர்கள் வேலை தேசி வெளி மாநிலங்களுக்கோ, வெளிநாட்டிற்கோ செல்லவேண்டிய அவசியம் இல்லை. அதிமுகவின் 2023 விஷன் திட்டத்தை விரைவாக செயல்படுத்த முதல்வரும் , துணை முதல்வரும் முயற்சி எடுத்து வருகின்றனர். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை, மதுரை மற்றும் தூத்துக்குடியில் புதிய தொழிற்சாலைகள் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதனால் நம் மாநிலத்திலே வேலை வாய்ப்புகள் அதிகரிக்க உள்ளது என கூறினார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP