பேரறிவாளனை விடுவிக்க ஆளுநர் உத்தரவிட வேண்டும் : ஸ்டாலின் வலியுறுத்தல்

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்க ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
 | 

பேரறிவாளனை விடுவிக்க ஆளுநர் உத்தரவிட வேண்டும் : ஸ்டாலின் வலியுறுத்தல்

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்க ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்க ஆளுநர் ஆணை பிறப்பிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் ஆளுநர் இனியும் காலம் தாழ்த்தக்கூடாது. 7 பேரின் விடுதலைக்கு எதிரான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது அவர்களின் வாழ்வில் நம்பிக்கை ஒளிக்கீற்றை தோற்றுவித்திருக்கிறது.

அவர்களை விடுவிக்க கோரி, தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்தின் மீது 8 மாதங்களாக ஆளுநர் எந்த முடிவும் எடுக்கவில்லை. உரிய காலத்தில் உத்தரவு பிறப்பிக்காமல் ஆளுநர் தாமதப்படுத்தி வருகிறார் என்பது வேதனைக்குரியது. இனி ஆளுநருக்கு எந்த தடையும் இல்லை; வேறு எந்த காரணத்தையும் சொல்லவழியும் இல்லை’ என்று மு.க.ஸ்டாலின் அதில் குறிப்பிட்டுள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP