7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் முடிவு எடுக்கலாம்: மத்திய அரசு

7 பேர் விடுதலை விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதாவது 7 பேரை விடுதலை செய்யும் விவகாரத்தில் ஆளுநர் உடனடியாக முடிவெடுக்கலாம் என தெரிவித்துள்ளது.
 | 

7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் முடிவு எடுக்கலாம்: மத்திய அரசு

7 பேர் விடுதலை விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. 

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளான பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை சிறையில் இருந்து விடுதலை செய்ய தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதையடுத்து இந்த விவகாரத்தில் தமிழக ஆளுநர் முடிவெடுக்கலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

அதன்படி தமிழக அரசு ஆளுநருக்கு கடிதம் அனுப்பி பரிந்துரை செய்துள்ளது. பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாளும் ஆளுநரை தனியாக சந்தித்து மனு அள்ளித்தார். 

இந்த சூழ்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் மனுவுக்கு எதிராக அப்பாஸ் என்பவர் ரிட் மனு தாக்கல் செய்தார். இந்த மனு குறித்து பதிலளித்த மத்திய அரசு, "அப்பாஸின் மனு காலாவதியானது என தெரிவித்துள்ளது. 

அதாவது 7 பேரை விடுதலை செய்யும் விவகாரத்தில் ஆளுநர் உடனடியாக முடிவெடுக்கலாம் என தெரிவித்துள்ளது. இதன்மூலம் ஆளுநரின் முடிவுக்கு ஏற்ப விரைவில் 7 பேரும் விடுதலை செய்யப்படுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

முன்னதாக, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையில் தாமதம் செய்யும் ஆளுநரின் முடிவு சரியானது இல்லை என ஜார்கண்ட் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கற்பக விநாயகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP