காஞ்சிபுரம் அத்திவரதர் வைபவ விழாவில் ஆளுநர் கலந்துகொள்கிறார்!

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் அத்திவரதர் வைபவ விழாவில் கலந்துகொள்வதற்காக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று காஞ்சிபுரம் செல்கிறார்.
 | 

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வசந்த மண்டபத்தில் அத்திவரதர் வைபவ விழாவானது நாளை(ஜூலை 1) காலை தொடங்குகிறது.   40 ஆண்டுகளுக்கு பிறகு இந்த நிகழ்வு நடைபெறுகிறது. 

இந்நிலையில், அத்திவரதர் வைபவ விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று காஞ்சிபுரம் செல்கிறார். இன்று இரவு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள மாளிகையில் தங்கி விட்டு, நாளை காலை அத்திவரதர் வைபவ விழாவில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து விட்டு சென்னை திரும்புகிறார். 

இந்நிகழ்வுக்கு ஆளுநர் வரும் அதே வேளையில்  லட்சக்கணக்கான பக்தர்களும் தரிசனம் செய்ய வருவதையொட்டி, அப்பகுதி முழுவதும் போலீசார் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP