ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புடைய கடத்தல் தங்கம் சிக்கியது

ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புடைய கடத்தல் தங்கம் சிக்கியது
 | 

ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புடைய கடத்தல் தங்கம் சிக்கியது

சென்னை விமான நிலையத்தில் கடந்த 2 தினங்களில் மட்டும் 1 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இலங்கை கொழும்புவிலிருந்து இண்டிகே மற்றும் பட்டிக் ஏர்லைன்ஸ் விமானங்கள் மூலம் சென்னைக்கு வந்த 3 பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை இட்டனர். இதில் பேண்ட் பாக்கெட்டுகள், துணி பெல்ட்டுகள் மற்றும் மலக்குடல் ஆகியவற்றில் மறைத்து கொண்டு வந்த 2 கிலோ தங்கம் பிடிபட்டது. இதைப்போன்று தாய் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் பாங்காக்கில் இருந்து சென்னை வந்த 4 பயணிகளிடமிருந்து 641 கிராம் தங்கமும், துபாய் எமிரேட்ஸ் விமானம் மூலம் சென்னை வந்த 2 பயணிகளிடமிருந்து 862 கிராம் தங்கத்தையும் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். தங்கத்தை கடத்தி வந்த மூன்று பேரையும் அதிகாரிகள் கைது செய்தனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP