பொன். மாணிக்கவேல் நேர்மையான அதிகாரி என்று யார் சொன்னது? - அமைச்சர் சி.வி.சண்முகம்

பொன். மாணிக்கவேல் நேர்மையான அதிகாரி என்று யார் சொன்னது? அவர் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் உள்ளன என தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார்.
 | 

பொன். மாணிக்கவேல் நேர்மையான அதிகாரி என்று யார் சொன்னது? - அமைச்சர் சி.வி.சண்முகம்

பொன். மாணிக்கவேல் நேர்மையான அதிகாரி என்று யார் சொன்னது? அவர் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் உள்ளன என  தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழக அரசுக்கும், சிலைகடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி பொன் மாணிக்கவேலுக்கும் தொடர் மோதல் இருந்து வருகிறது. சமீபத்தில் அவரது பதவிக்காலம் முடிவடைந்ததையொட்டி, அவரது பதவிக்காலத்தை ஓராண்டுக்கு நீட்டித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் சிலை கடத்தல் பிரிவு ஐ.ஜி பொன் மாணிக்கவேல் மீது நடவடிக்கை எடுக்க கோரி 13 காவல் அதிகாரிகள் டிஜிபியிடம் புகார் அளித்தனர். மேலும், அவர் மீது பல்வேறு அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.

இதுகுறித்து நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பொன் மாணிக்கவேல், "தன் மீது புகார் அளித்த காவலர்கள் இதுவரை முதல் தகவல் அறிக்கையையும் பதியவில்லை. புகார் கூறியவர்கள் ஒருமுறை கூட பணி மாறுதல் கோரவில்லை. என் மீதான புகார்கள் எதிர்பார்த்த ஒன்று தான்.

மேலும் சிலை கடத்தல் வழக்கு விசாரணைக்கு இது போல எவ்வளவு தடைகள் வந்தாலும் அதனை எல்லாம் கடந்து தனது கடமையில் சிறப்பாக செயல்படுவேன்" என தெரிவித்தார். 

இந்நிலையில் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பொன் மாணிக்கவேல் பதவியில் இருக்கிறார் என்ற மமதையில் பேசுகிறார். நீதிமன்ற உத்தரவின் எதிரொலியாக அவர் தப்பித்து வருகிறார். அவர் கூறும் குற்றச்சாட்டுகள் எதுவும் உண்மையல்ல.  உயர் அதிகாரி என்ற கோதாவில் சுற்றித் திரிகிறார். 

பொன். மாணிக்கவேல் நேர்மையான அதிகாரி என்று யார் சொன்னது? அவர் எத்தனை வழக்குகளை பதிவு செய்துள்ளார். எத்தனை சிலைகளை கண்டுபிடித்துள்ளார். அவர் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் உள்ளன. கீழ் அதிகாரிகளுக்கு தொந்தரவு மற்றும் கடுமையான மன உளைச்சலை கொடுத்துள்ளார்" என்று தெரிவித்தார். 

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP