சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் கடத்த முயற்சி.. 

சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் கடத்த முயற்சி..
 | 

சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் கடத்த முயற்சி.. 

வெளிநாடுகளில் இருந்து சென்னை விமான நிலையம் வழியாக தங்கம் கடத்தப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் விமான நிலையத்தில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி ஹாங்காங்கில் இருந்து சென்னை வந்த விமானத்தில் சந்தேகப்படும்படி வந்த பயணி ஒருவரின் உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். மேலும் அவரையும் முழுமையாக சோதனை செய்தனர். அப்போது அவர் 5 கிலோ தங்க கட்டிகளை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ.1.91 கோடி என அதிகாரிகள் கூறுகின்றனர். தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் கடத்தலில் ஈடுபட்ட பயணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகினறனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP