விஜயகாந்தை சந்திக்கிறார் ஜி.கே.வாசன்?

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் இன்று மாலை தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்தை அவரது இல்லத்தில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 | 

விஜயகாந்தை சந்திக்கிறார் ஜி.கே.வாசன்?

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் இன்று மாலை தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்தை அவரது இல்லத்தில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுகவுடன் பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி வைத்துள்ளன. அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக, பாமக ஆகிய இரண்டு கட்சித் தலைவர்களும் எதிரும் புதிருமாக இருந்த நிலையில், தேர்தல் கூட்டணி மூலமாக நேற்று சந்திப்பு நடைபெற்றது. 

தொடர்ந்து, அதிமுக கூட்டணியில் நேற்று ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் இணைந்துள்ள நிலையில், ஜி.கே.வாசன் இன்று மாலை உடல்நலம் குறித்து விசாரிக்க விஜயகாந்தை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP