நடுரோட்டில் உருட்டுகட்டையால் ஆண் ஒருவரை வெளுத்துக்கட்டிய பெண்.. காட்டிக்கொடுத்த சிசிடிவி..

சென்னை புரசைவாக்கத்தில் இரவு நேரத்தில் குடிபோதையில் இருந்த ஆண் ஒருவரை உருட்டுக்கட்டையால் வெளுத்து கட்டிய வீடியோ வைரலாகி உள்ளது.
 | 

சென்னை புரசைவாக்கத்தில் சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருபவர்கள் சிவா - இந்து தம்பதி. சிவாவிற்கு குடி பழக்கம் இருப்பதால் தினமும் குடித்து விட்டு அவருடைய மனைவி இந்துவிடம் பிரச்சனை செய்வது, வாக்குவாதம் பண்ணுவது, அடிப்பது வழக்கமாக இருந்துள்ளது. இதனால் தினமும் கண்ணீரும், கவலையுமாக இருக்கும் இந்துவை கண்டு அவரது சகோதரி சங்கீதா வேதனைபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், வழக்கம் போல்  சிவா குடித்து விட்டு வந்து இந்துவை அடித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சங்கீதா தங்கையின் கணவர் என்று கூட பாராமல் அவரை நடு ரோட்டில் வைத்து உருட்டு கட்டையால் வெளுத்து வாங்கியுள்ளார். இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP