சிறுமியை பாலியல் கொலை செய்த வழக்கு! குற்றவாளிக்கு தூக்கு தண்டனை!

கோவை சிறுமியை பாலியல் கொலை வழக்கு! குற்றவாளிக்கு தூக்கு தண்டனை!
 | 

சிறுமியை பாலியல் கொலை செய்த வழக்கு! குற்றவாளிக்கு தூக்கு தண்டனை!

கோவை பன்னிமடையில் 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் சந்தோஷ் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு, இன்று மாலை 3 மணிக்கு தீர்ப்பு வழங்குவதாக நீதிபதி அறிவித்திருந்தார். அதன் படி, குற்றவாளி சந்தோஷ் குமாருக்கு தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

பன்னிமடையை சேர்ந்த 6 வயது சிறுமி கடந்த மார்ச் மாதம் தனது வீட்டின் அருகே சடலமாக மீட்கப்பட்டார். காவல்துறை விசாரணையில், தொண்டாமுத்தூரை சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவர், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது தெரிய வந்தது.

இதையடுத்து, சந்தோஷ் குமாரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பாக போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில், நீதிபதி ராதிகா இன்று தீர்ப்பளித்தார். குற்றவாளி சந்தோஷ் குமாருக்கு தூக்கு தண்டனை விதித்து கோவை போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP