ஆழ்துளையில் குழந்தை சிக்கியிருப்பது இதயத்திற்கு வலியை தருகிறது!

ஆழ்துளை கிணற்றில் குழந்தை சிக்கித்தவிப்பது இதயத்திற்கு வலியை தருவதாக அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்துள்ளார்.
 | 

ஆழ்துளையில் குழந்தை சிக்கியிருப்பது இதயத்திற்கு வலியை தருகிறது!

ஆழ்துளை கிணற்றில் குழந்தை சிக்கித்தவிப்பது இதயத்திற்கு வலியை தருவதாக அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்துள்ளார். 

திருச்சி ஆழ்துளை கிணற்றில் சிக்கி தவிக்கும் குழந்தை நலமுடம் மீட்கப்பட வேண்டும் என பல தரப்பு மக்களும் பிரார்த்தனை செய்து வருகின்றனர். இச்சம்பவம் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களையும் உலுக்கி உள்ளது. இந்நிலையில், ஆழ்துளை கிணற்றில் குழந்தை சிக்கித்தவிப்பது இதயத்திற்கு வலியை தருவதாகவும், குழந்தையை பத்திரமாக மீட்க அரசு முழுவீச்சில் செயல்பட்டு வருவதாகவும் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார். 

இதேபோல், ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள குழந்தையை பத்திரமாக மீட்பார்கள் என்ற நம்பிக்கையுள்ளதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். 

ஆழ்துளை கிணற்றில் குழந்தை தவறிவிழுந்த நிகழ்வு மனதை பதைக்கச் செய்கிறது என்றும் குழந்தை நலமுடன் மீட்கப்பட இறைவனை பிரார்த்திப்பதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் கூறியுள்ளார். 

Newstm.in 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP