கியார் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்!

அரபிக்கடலில் உருவாகியுள்ள கியார் புயலால் மீனவர்கள் பாதிக்காமால் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
 | 

கியார் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்!

அரபிக்கடலில் உருவாகியுள்ள கியார் புயலால் மீனவர்கள் பாதிக்காமால் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்ட அறிக்கையில்,  கடந்த 24-ந்தேதியன்று திருவனந்தபுரம் மண்டல வானிலை ஆராய்ச்சி மையம் வழங்கிய சிறப்பு வானிலை அறிக்கையில் அரபிக்கடலில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது வலுப்பெற்று ‘கியார்’ என்ற தீவிர புயலாக மாறி கிழக்கு மத்திய அரபிக்கடலில் நிலை கொண்டுள்ளது.

அதைத் தொடர்ந்து தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களுக்கு புயல் குறித்த எச்சரிக்கை மாவட்ட மீன்துறை அலுவலர்கள் மூலமாகவும், அனைத்து கடலோர மீனவ அமைப்புகள் மற்றும் மீனவ கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவும் இவ்வானிலை தொடர்பான தகவல்கள் வழங்கப்பட்டது.

மீன்வளத்துறையைச் சார்ந்த இரண்டு மீன்துறை துணை இயக்குனர்கள் தலைமையில் 10 அலுவலர்கள் அடங்கிய குழு, கன்னியாகுமரி மாவட்டத்திற்கு புயல் முன்னெச்சரிக்கைப் பணிகளை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டது. பிற மாநிலங்களில் கரை திரும்பும் மீனவர்களுக்கு உதவிடும் வகையில் மீன்துறை உயர் அலுவலர்கள் கோவா, ரத்தினகிரி, கார்வார், தேவ்காட் மற்றும் கொச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். குளச்சல் மீன்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் 24 மணிநேரமும் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு அறை நிறுவப்பட்டுள்ளது.

மேற்கண்ட இந்த நடவடிக்கைகள் மூலம் அரபிக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த 743 படகுகள் பத்திரமாக அருகிலுள்ள துறைமுகங்களுக்கு வந்து சேர்ந்துள்ளன.  தொடர் நடவடிக்கையின் காரணமாக ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டிருந்த 757 படகுகளை தொடர்பு கொண்டு புயல் பற்றிய முன்னெச்சரிக்கை செய்திகள் வழங்கப்பட்டன.

27-ந்தேதி வானிலை அறிக்கையில் தென்மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா, குமரி கடல், தென் தமிழக கடலோர பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வானிலை எச்சரிக்கை தொடர்பான விரிவான செய்தி குறிப்பு, அனைத்து மீனவர் சங்கங்கள், மீனவ பிரதிநிதிகள் மற்றும் பங்கு தந்தைகளுக்கு எழுத்து மூலம் வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP