வெளிவிளிம்பு கரையை தொட்டது ‘கஜா’- வானிலை ஆய்வு மையம்

கஜா தீவிரமடைந்ததால் இரவு 10 முதல் 11 மணி அளவில் அதிக அளவில் காற்று வீசும். கஜா புயல் கரையை தொட தொடங்கியதால் நாகை மற்றும் காரைக்காலில் தற்போது மழை தொடங்கி உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 | 

வெளிவிளிம்பு கரையை தொட்டது ‘கஜா’- வானிலை ஆய்வு மையம்

கஜா புயலின் வெளிபாகம் கரையை தொட தொடங்கியது என வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன், “கஜா புயல் நாகைக்கு கிழக்கே 138 கி.மீ தூரத்தில் 10 கிமீ வேகத்தில் உள்ளது. புயலின் உள்பகுதி விட்டம் 20 கிமீ ஆக உள்ளது. புயலின் வெளிப்பகுதி கரையை கடக்க தொடங்கி உள்ளது. கஜா புயலின் வெளிப்பகுதி கரையை கடக்க தொடங்கி உள்ளது. நாகை பகுதிகளில் மழை தொடங்கியுள்ளது. இரவு 9 மணி முதல் மணிக்கு 90 கிமீ வேகத்தில் காற்று வீசும். இரவு 10 முதல்  11 மணி அளவில் அதிக அளவில் காற்று வீசும். கஜா புயல் கரையை தொட தொடங்கியதால் நாகை மற்றும் காரைக்காலில் தற்போது மழை தொடங்கி உள்ளது” எனக் கூறினார். 

Newstm.in 


 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP