ஒடிசாவை நோக்கி நகரும் ஃபனி புயல்!

ஃபனி புயல் ஒரிசா கடற்கரையை நோக்கி மெல்ல நகர்ந்து செல்வதாகவும், இதன் காரணமாக தமிழக கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 | 

ஒடிசாவை நோக்கி நகரும் ஃபனி புயல்!

ஃபனி புயல் ஒரிசா கடற்கரையை நோக்கி மெல்ல நகர்ந்து செல்வதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில் வானிலை ஆய்வு மண்டல இயக்குநர் பாலசந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஃபனி புயல் இன்று அதிகாலை அதிதீவிர புயலாக வலுபெற்று தற்பொழுது தென் மேற்கு வங்க கடல் பகுதியில் சென்னையில் இருந்து சுமார் 572 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது.

இது வலுபெற்று வடமேற்கு திசையில் நாளை மாலை வரை நகர்ந்து பின்னர்  வடக்கு மற்றும் வடகிழக்கு திசையில் ஒரிசா கடற்கரையை நோக்கி மெல்ல நகர்ந்து செல்லக்கூடும். குமரிக் கடல், மன்னார் வளைகுடா மற்றும் வட தமிழக கடலோரப் பகுதிகளில் இன்று மணிக்கு 30 முதல் 45 கி.மீ வேகத்திலும் சிலநேரம் 50 கி.மீ வேகத்திலும் காற்று வீசக்கூடும்.

தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகள் மே 2 ஆம் தேதி கடல் கொந்தளிப்பாக காணப்படும் என்பதால், மீனவர்கள் இன்று தென் மேற்கு வங்க கடல் பகுதிகளுக்கும் நாளை தென் மேற்கு வங்க கடல் மற்றும் மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம். வட தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவித்தார்.

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP