பிரபஞ்சனுக்கு முழு அரசு மரியாதை - முதல்வர் நாராயணசாமி

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பிரபஞ்சன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, நேற்று மரணமடைந்தார். அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என பாண்டிச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
 | 

பிரபஞ்சனுக்கு முழு அரசு மரியாதை - முதல்வர் நாராயணசாமி

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பிரபஞ்சன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, நேற்று மரணமடைந்தார். 

73 வயதாகும் இவர் 1995-ம் ஆண்டு, 'வானம் வசப்படும்' என்ற நூலுக்கு சாகித்ய அகாடமி விருது பெற்றிருக்கிறார். இவரது படைப்புகள் இந்தி, கன்னடம், தெலுங்கு போன்ற இந்திய மொழிகளிலும், ஜெர்மன், பிரெஞ்சு, ஆங்கிலம், ஸ்வீடிஸ் போன்ற வெளிநாட்டு மொழிகளிலும் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளன. 

பாண்டிச்சேரியை பூர்வீகமாகக் கொண்ட பிரபஞ்சனின் இறுதி சடங்கு சொந்த மண்ணிலேயே நடக்கிறது. இந்நிலையில் அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என பாண்டிச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP