சுங்கச்சாவடிகளில் இலவச பயணம்! FasTag குளறுபடிகள்! 

சுங்கச்சாவடிகளில் இலவச பயணம்! FasTag குளறுபடிகள்!
 | 

சுங்கச்சாவடிகளில் இலவச பயணம்! FasTag குளறுபடிகள்! 

டிசம்பர் 1முதல் இந்தியாவில் பாஸ்ட்டேக் பயன்பாட்டை அதிகரிப்பதற்காக  இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (National Highways Authority of India - NHAI)  அனைத்து வாகனங்களுக்கும் FAST TAG கட்டாயம் என்று அறிவித்தது. குறிப்பிட்ட நாட்களுக்குள் சேவை முடிக்கப்படாததால், 15 நாட்கள் கூடுதல் கால அவகாசம் வழங்கியது  NHAI. இதனால் டிசம்பர் 15ம் தேதி முதல், டோல்கேட்டில் FAST TAG முறையை அறிமுகப்படுத்தியது. ஆனால், இன்னும் முழுமையாக அனைத்து வாகனங்களுக்கும் வழங்கப்படாததால், ஜனவரி 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.

சுங்கச்சாவடிகளில் இலவச பயணம்! FasTag குளறுபடிகள்! 

இந்த முறையில் FAST TAG ஸ்டிக்கர்களை நம்முடைய வாகனத்தின் முன் பக்க விண்டுஷீல்டில் பொருத்தி கொள்ள வேண்டும்.  வாகனம் டோல்கேட்டைக் கடந்து செல்லும் போது, அங்கு உள்ள சென்சார்கள் இந்த TAG கை ஆட்டோமெட்டிக்காக கண்டறியும். பயணத்திற்குரிய  கட்டணத்தை நம்  கணக்கில் இருந்து எடுத்து கொள்ளும். கணக்கில் பணம் தீர்ந்த பிறகு நீங்கள் மீண்டும் ரீசார்ஜ் செய்து கொள்ள வேண்டும்.  

டோல்கேட்களில் கட்டணம் செலுத்த நீங்கள் காத்து கொண்டிருக்க தேவையில்லை. இதன் மூலமாக உங்கள் நேரம் மிச்சமாகும். அத்துடன் கட்டணம் செலுத்த காத்து கொண்டிருக்கும் நேரத்தில், உங்கள் வாகனத்தின் எரிபொருள் வீணாவதும் FAST TAG  மூலம் தவிர்க்கப்படும். மேலும் நீங்கள் தங்கு தடையின்றி பயணம் செய்து கொண்டே இருக்க முடியும்.

சுங்கச்சாவடிகளில் இலவச பயணம்! FasTag குளறுபடிகள்! 

TOLL GATE களில் ஏற்படும் பயங்கரமான போக்குவரத்து நெரிசலை குறைப்பதுடன்  வாகனங்களின் தடையற்ற இயக்கத்தையும் FAST TAG  உறுதி செய்கிறது. காகித பயன்பாடும் FAST TAG க் குறைக்கிறது. FAST TAG ஸ்டிக்கரை ஸ்கேனரால் READ செய்ய முடியாவிட்டால்  ரொக்கமாக கட்டணத்தை செலுத்தப்பட வேண்டுமா என்பதில் நம்மில் பலருக்கும் சந்தேகமே.
வாகனத்தில் ஒட்டப்பட்டிருக்கும் FAST TAG ஸ்டிக்கரை ஸ்கேனரால்  READ  செய்ய முடியவில்லை  எனில் குறிப்பிட்ட அந்த டோல்கேட்டை நீங்கள் இலவசமாகவே கடந்து செல்ல முடியும் என்று  விதிமுறையில் கூறப்பட்டுள்ளது.

தகுந்த ஆவணங்கள் மற்றும்  FAST TAG உடன் ஒருவர் டோல்கேட்டை கடக்கும் போது ELECTRONIC DEVICE ஆல் ஏற்படும் இயந்திரக் கோளாறுகளால் ஒருவருடைய பயணத்தை தடை செய்யக்கூடாது என்று தேசிய நெடுஞ்சாலைகள் கட்டண (கட்டணம் மற்றும் வசூலை தீர்மானித்தல்) திருத்த விதிகள் 2018 தெளிவாகக் கூறுகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP