தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை: விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்

கட்டாயக் கல்வி உரிமை சட்டப்படி தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள். இதுவரை 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.
 | 

கட்டாயக் கல்வி உரிமை சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25% இடங்களில் இலவசமாக ஏழை மாணவர்கள் சேர்க்கப்படுவர். எல்கேஜி அல்லது ஒன்றாம் வகுப்பில் இலவசமாக சேரும் மாணவர்கள் 8-ஆம் வகுப்பு வரை கட்டணம் செலுத்த தேவையில்லை. மாநிலம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் அதிகமான தனியார் பள்ளிகளில் 1.21 லட்சம் இடங்கள் உள்ளன.  இலவச மாணவர் சேர்க்கைக்கு www.rte.tnschools.gov.in  என்ற தளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் கால அவகாசம் நாளையுடன் முடிவடைகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP