கட்டுமான தொழிலாளர்களுக்கு இலவச உணவுத் திட்டம் தொடக்கம்!

கட்டுமான தொழிலாளர்களுக்கான இலவச உணவு வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.
 | 

கட்டுமான தொழிலாளர்களுக்கு இலவச உணவுத் திட்டம் தொடக்கம்!

கட்டுமான தொழிலாளர்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டத்தை முதல்வர் பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். 

சென்னை சாந்தோமில் உள்ள அம்மா உணவகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல்வர் பழனிசாமி கலந்து கொண்டு கட்டுமான தொழிலாளர்களுக்கு உணவு பரிமாறி, திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் ஜெயக்குமார், வேலுமணி, நீலோபர் கபில், உதயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

ஏற்கனவே அம்மா உணவகம் மூலம் குறைந்த விலைக்கு உணவு வழங்கப்பட்டு வருவது ஏழை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், கட்டுமான தொழிலாளர்களுக்கு இலவசமாக உணவு வழங்குவதன் மூலம் 21 லட்சம் தொழிலாளர்கள் பயனடைவர். தமிழகத்தில் உள்ள 658 அம்மா உணவகத்திலும் கட்டுமான தொழிலாளர்களுக்கு இலவசமாக உணவு வழங்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP