Logo

அஞ்சலங்களில் குவியும் வெளிநாட்டு போதை மருந்துகள்! பகீர் கிளப்பும் தபால் ஊழியர்கள்!!

பெங்களூருவில் சாம்ராஜ்பேட் போஸ்ட் ஆபிசில், போதை மாத்திரை கடத்தலுக்கு உதவியாக இருந்த ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.
 | 

கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள சாம்ராஜ்பேட் அஞ்சலகத்தில் ஊழியர்கள் சிலர் போதை பொருட்களை கடத்தி வருவது மேலதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் அங்கு பணிபுரிந்த போஸ்டல் உதவியாளர் ரமேஷ்குமார் (47), சுபா (34), சயீத் மஜித் (54), விஜயராஜன் (58) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். 

அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் 4 பேரும் உள்ளூர் போதை கடத்தல் கும்பலோடு தொடர்பு வைத்துக் கொண்டு நெதர்லாந்து ,கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்து போதை மாத்திரைகள், பிரவுன் சுகர் போன்ற போதை பொருட்கள் வரும் பார்சலை ஸ்கேன் பண்ணாமல், பிரிக்காமல் அதை உரிய போதை கடத்தல் கும்பலிடம் கொண்டு போய் சேர்க்கும் பணியை செய்து வந்துள்ளனர். இதற்காக பல லட்சங்களை பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP