பயணிகள் கவனத்திற்கு: ரயில்கள் தாமதமாக செல்லும்

வாலாஜா சாலை - முகுந்தராயபுரம் இடையே பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் சில ரயில்கள் தாமதமாக செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
 | 

பயணிகள் கவனத்திற்கு: ரயில்கள் தாமதமாக செல்லும்

வாலாஜா சாலை - முகுந்தராயபுரம் இடையே பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதால் சில ரயில்கள் தாமதமாக செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், வாலாஜா சாலை - முகுந்தராயபுரம் இடையே பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதால், ஜூன் 13-ஆம் தேதி ஜெய்ப்பூர் - கோவை வாராந்திர அதிவிரைவு ரயில் வாலாஜா ரோடு நிலையத்தில் 110 நிமிடங்களும், ஹவுரா - யஷ்வந்த்ப்பூர் துரந்தோ விரைவு ரயில் தலங்கை நிலையத்தில் 105 நிமிடங்களும் நின்று செல்லும். 

மேலும், ஜூன் 14-ஆம் தேதி காமக்யா - யஷ்வந்த்பூர் வாராந்திர குளிர்சாதன விரைவு ரயில், வாலாஜா ரோடு நிலையத்தில் 25 நிமிடங்களும், ஜூன் 15-ஆம் தேதி ஹவுரா - யஷ்வந்த்ப்பூர் துரந்தோ விரைவு ரயில், வாலாஜா ரோடு நிலையத்தில் 95 நிமிடங்களும் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே வெளியிட்டு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP