காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: மத்திய அரசு எச்சரிக்கை

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக ஜல்சக்திதுறை எச்சரித்துள்ளது.
 | 

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: மத்திய அரசு எச்சரிக்கை

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக ஜல்சக்திதுறை எச்சரித்துள்ளது.

ஜல்சக்திதுறை விடுத்துள்ள எச்சரிக்கை செய்தியில், ‘கர்நாடகாவின் கபினி நீர்பிடிப்பு பகுதிகளில் நாளையும், நாளை மறுநாளும் கனமழை பெய்யும். கனமழை காரணமாக கபினி ஆற்றில் இருந்து காவிரி ஆற்றுக்கு அதிக நீர் திறக்கப்பட வாய்ப்புள்ளது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம்’ என்று அதில் குறிப்பிட்டுள்ளது.

மேலும், அடுத்த 24 மணி நேரத்தில் மேட்டூர் அணைக்கு 5 முதல் 6 டிஎம்சி வரை நீர்வரத்து இருக்கும் என்றும் ஜல்சக்திதுறை தெரிவித்துள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP