கடல் பகுதியில் சூறைக்காற்று: மீனவர்களுக்கு எச்சரிக்கை!

குமரி கடல் மற்றும் தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறைக்காற்று வீசுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
 | 

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம்  வெளியிட்டுள்ள அறிக்கையில், "அடுத்த 24 மணி நேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், மற்ற மாவட்டங்களில் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். குமரி கடல், அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறைக்காற்று வீசுவதால் அடுத்த 2 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது. 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP