மீனவர்கள் அடுத்த 2 நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம்! - வானிலை ஆய்வு மையம்

தென் தமிழகக் கடற்கரையோரப் பகுதி மீனவர்கள் அடுத்த இரண்டு நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 | 

இன்று செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர், "மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள நீலகிரி, கோவை, தேனி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 35 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. பவானியில் 19 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. கடலில் 40 முதல் 50 கி.மீ வேகத்தில் காற்று வீசுவதால், அடுத்த 2 நாட்களுக்கு தென் தமிழக கடற்கரையோரப் பகுதி மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் படிப்படியாக மழை குறையும் வாய்ப்புள்ளது" என்று தெரிவித்தார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP