மத்திய மேற்கு வங்கக்கடல், வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்: வானிலை மையம்

மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
 | 

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், " ஃபனி புயலானது தற்போது விசாகப்பட்டினத்திற்கு சுமார் 210 கிலோ மீட்டர் தொலைவில் தெற்கு மற்றும் தென்கிழக்கு பகுதியில் மையம் கொண்டுள்ளது. இது மே 3ம் தேதி மாலை ஒடிசா மாநிலம் பூரி பகுதியில் கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் மயிலம் பகுதியில் 4செ.மீ, வானூர் 3 செ.மீ., காட்டுமன்னார்கோயில், பாண்டிச்சேரியில் தலா 2 செ.மீ மற்றும் திண்டிவனத்தில் 1 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

புயலின் காரணமாக வரும் 3ம் தேதி வரை மீனவர்கள் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிக்கும், வடமேற்கு வங்கக்கடல் பகுதிக்கும் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொருத்த வரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன்  இருக்கும் என்றும், அதிகப்பட்ச வெப்பநிலையாக 38 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலையாக 29 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP