நிதிஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ள முதல்வர் இன்று டெல்லி பயணம்!

டெல்லியில் நாளை நடக்கவுள்ள நிதிஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி செல்ல இருக்கிறார்.
 | 

நிதிஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ள முதல்வர் இன்று டெல்லி பயணம்!

டெல்லியில் நாளை நடக்கவுள்ள நிதிஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி செல்ல இருக்கிறார். 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று, பிரதமர் மோடி தலைமையில் மத்தியில் மீண்டும் ஆட்சி அமைந்துள்ளது. இதையடுத்து, புதிய அரசு பதவி ஏற்ற பிறகு, முதல் முறையாக நிதி ஆயோக் கூட்டம் டெல்லியில் நாளை நடைபெற உள்ளது. 

இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அனைத்து மாநில முதல்வர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, நிதிஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை 5 மணிக்கு டெல்லி செல்கிறார். அவருடன் தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் சில அதிகாரிகளும் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும், தமிழக பிரச்னைகள், தமிழகத்திற்கு தேவையான நிதி உதவிகள் குறித்து அவர் பிரதமர் மோடியையும் தனியே சந்தித்துப் பேசுகிறார். தமிழக தேவைகள் குறித்த கோரிக்கை மனுவையும் அவர் பிரதமரிடம் வழங்க இருக்கிறார்.

பிரதமர் மோடி மட்டுமில்லாது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் சில அமைச்சர்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP