சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்!

சென்னையில் இருந்து இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
 | 

சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்!

சென்னையில் இருந்து இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  

சென்னையை பொறுத்தவரை, மக்கள் செங்கல்பட்டில் இருந்து அரக்கோணம் செல்ல வேண்டும் என்றால் பார்க் ஸ்டேஷன் அல்லது பீச் ஸ்டேஷனுக்கு வந்து தான் செல்லும் நிலை இருந்தது. இதனால், கடற்கரை- செங்கல்பட்டு- அரக்கோணம் இடையே சுற்றுவட்ட(சர்க்குலர்) ரயில் இயக்க வேண்டும் என்று தெற்கு ரெயில்வே-யிடம் மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர். 

இதைத்தொடர்ந்து, கடந்த பல மாதங்களாக ரயில்வே பணிகள் நடைபெற்ற நிலையில், தற்போது சர்க்குலர் ரயில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இன்று முதல் சென்னை கடற்கரை- அரக்கோணம்- காஞ்சிபுரம்- செங்கல்பட்டு- தாம்பரம்- சென்னை கடற்கரை வரை இயக்கப்படுகிறது.

தினமும் காலை 10.30 மணிக்கு சென்னை கடற்கரையில் இருந்து அரக்கோணம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தாம்பரம் வழியாக இயக்கப்படும் இந்த சர்குலர் ரயில் மாலை 4.10 மணிக்கு மீண்டும் கடற்கரை ரயில்வே நிலையத்துக்கு வந்தடையும். 

மறுமார்க்கமாக மற்றொரு ரயில், 9.50 மணிக்கு சென்னை கடற்கரையில் இருந்து புறப்பட்டு தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரக்கோணம் வழியாக கடற்கரையை 4.10 மணிக்கு வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்!

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP