மதுரை கே.கே.நகர் ஐசிஐசிஐ வங்கியில் தீ விபத்து!

மதுரை கே.கே.நகரில் உள்ள ஐசிஐசிஐ வங்கியில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புப்படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
 | 

மதுரை கே.கே.நகரில் உள்ள ஒரு கட்ட்டிடத்தின் இரண்டாம் தளத்தில் ஐசிஐசிஐ வங்கிக் கிளை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலை 8 மணி அளவில் 2ம் தளத்தில் தீ பரவத் தொடங்கியது. பின்னர் அங்கிருந்தவர்கள் புகை வருவதைக்கண்டு போலீசாருக்கும்,  தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து  4 தீயணைப்பு வாகனங்களுடன் வந்த தீயணைப்புப்படையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

ஓரளவுக்கு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்த போலீசார் விசாரணை செய்ததில், வங்கியில்  ஏற்பட்ட மின் கசிவே காரணம் என தெரியவந்துள்ளது. இதில் ஏராளமான கணினிகள், பொருட்கள் சேதமடைந்துள்ளன. எனினும் முழுமையாக சேதமதிப்பு குறித்து தகவல் தெரிவிக்கப்படவில்லை. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP