கொடைக்கானலில் போர் விமானம் பறந்ததா?

கொடைக்கானலில் தற்போது கோடை விழா நடைபெற்று வரும் நிலையில், வானில் போர் விமானம் பறந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 | 

கொடைக்கானலில் போர் விமானம் பறந்ததா?

கொடைக்கானலில் தற்போது கோடை விழா நடைபெற்று வரும் நிலையில், வானில் போர் விமானம் பறந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தற்போது கோடை விழா நடைபெற்று வருகிறது. கோடை விழாவின் முதல் நாளான நேற்று தமிழக அமைச்சர்கள் மூன்று பேர் கலந்து கொண்டு விழாவை தொடக்கி வைத்தனர்.

கோடை விழாவை முன்னிட்டு சுற்றுலா பயணிகளின் வருகை கொடைக்கானலில் வழக்கத்தை விட மிகவும் அதிகமாக உள்ளது. கோடை விடுமுறை முடியும் தருவாயில் இருப்பதால் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. 

இந்நிலையில் கொடைக்கானல் நகர் பகுதிகளில் வானில் ராணுவ விமானம் ஒன்று பறந்த நிலையில், இது சுற்றுலா பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முதலே விமானம் ஒன்று தாழ்வாக பறந்து வருவதால், இது ஏதேனும் பயிற்சி விமானமா? அல்லது ராணுவ விமானமா? என மக்கள் குழப்பமடைந்துள்ளனர். 

எனவே  சுற்றுலா பயணிகள் இந்த அச்சத்தைப் போக்கும் வகையில் மாவட்ட நிர்வாகமும், மாநில சுற்றுலாத் சுற்றுலாத்துறைக்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP