500 இடங்களில் விவசாயிகள் சாலை மறியல்! தமிழகத்தில் ஜனவரி 8ம் தேதி போராட்டம்!

தமிழகம் முழுவதும் நாளை 8ம் தேதி (புதன் கிழமை) விவசாயிகள் போராட்டம் நடத்தப் போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும், விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரயில், சாலை மறியலில் ஈடுபட இருப்பதாகவும், தமிழகத்தில் மட்டும் சுமார் 500 முக்கிய சந்திப்புகளில் சாலை மறியலில் ஈடுபட இருப்பதாகவும் விவசாய சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
 | 

இன்று 500 இடங்களில் விவசாயிகள் சாலை, ரயில் மறியல் போராட்டம்

தமிழகம் முழுவதும் நாளை 8ம் தேதி (புதன் கிழமை) விவசாயிகள் போராட்டம் நடத்தப் போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும்,  விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரயில், சாலை மறியலில் ஈடுபட இருப்பதாகவும், தமிழகத்தில் மட்டும் சுமார் 500 முக்கிய சந்திப்புகளில் சாலை மறியலில் ஈடுபட இருப்பதாகவும் விவசாயிகள் சங்கத்தினர் மற்றும்  விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர்  இணைந்து அறிவித்துள்ளனர்.

இன்று 500 இடங்களில் விவசாயிகள் சாலை, ரயில் மறியல் போராட்டம்

இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசு விவசாயிகள், விவசாய தொழிலாளர்களுக்கு விரோதமான கொள்கைகளை கடைப்பிடித்து வருகிறது. இதனால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம் என்று தெரிவித்துள்ளனர்.

முக்கிய கோரிக்கைகளாக:-

  • தேசிய கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தில் 250 நாட்கள் வேலை
  • 60 வயதான விவசாயிகள், விவசாய தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் ஓய்வூதியம்
  • கூலி ரூ.600 ஆக உயர்த்துதல் 
  • விவசாயிகள், விவசாய தொழிலாளர்களின் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை நடத்த வேண்டும்
  • சுவாமிநாதன் குழுப் பரிந்துரைப்படி விளைபொருளுக்கு விலை நிர்ணயம்
  • குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெறவேண்டும்.
  •  2018-19 ஆம் ஆண்டுக்கான பயிர்க்காப்பீட்டுத் தொகையை உடனடியாக  வழங்க வேண்டும்.
  • கடன் கோரும் அனைத்து விவசாயிகளுக்கும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் வழங்க வேண்டும்

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை 8ம் தேதி தமிழகத்தில் 500 இடங்களில் சாலை மற்றும் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP